முடி உதிர்வதை நிறுத்தி அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும் 5 யோகா ஆசனங்கள்!
முடி உதிர்தலை ஏற்படுத்த பல்வேறு காரணங்கள் உள்ளன, ஆனால் முடி உதிர்தலை நிறுத்தி முடி வளர்ச்சியை தூண்ட யோகா உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? முடி உதிர்தலைக் குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் சில யோகா ஆசனங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
பாளையம் முத்ரா (Balayam Mudra):
பாளையம் முத்ரா என்பது உங்கள் நகங்களை ஒன்றுக்கொன்று தேய்க்கும் செயல்முறை ஆகும். முடி உதிர்தலைக் குறைக்கும் எளிதான வழிகளில் இதுவும் ஒன்றாகும். 5-10 நிமிடங்கள் உங்களது நகங்களை தேய்ப்பது மிகவும் நல்லது.
ஹெட் ஸ்டாண்ட் (Head Stand) :
ஹெட் ஸ்டாண்ட் என்பது சிரசாசனம் யோகா ஆகும். சிரசாசனம் என்றால் ஒருவர் தலைகீழாக நின்று செய்யப்படும் ஆசனமாகும். இந்த யோகா செய்வதால் உங்கள் முடி செல்களுக்கு ஆக்ஸிஜனை வழங்கி அவற்றை ஆற்றலாக்குகிறது. இதனால் முடி உதிர்தல் கட்டுப்படுகிறது.
1. விரிப்பின் மீது கால் முட்டிகளை அகட்டி வைத்து மண்டியிட்டு உட்காரவும்.
2. கை விரல்களை கோர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மீது கைகளை வைக்கவும்.
3,. உச்சந்தலையை விரிப்பின்மீது வைத்து கைகளால் தலையை பற்றி பிடித்துக் கொள்ளவும்.
4. தலை கை முட்டி, கால் விரல்கள் ஆகியவற்றை விரிப்பின் மீது அழுத்தி கால்முட்டிகளை உயர்த்தவும். அதே நேரத்தில் முதுகுத் தண்டு நேராக வரும்படி கால்களை முன்னால் நகர்த்தி கொண்டு வரவும்.
5. சுவர் ஓரமாக இந்நிலையிலிருந்து கால்கள் இரண்டையும் உயரே மெதுவாக தூக்கி குதிகால்கள் சுவற்றின்மீது படும்படி வைத்து உடம்பை நேராக்கி கண்களை மூடவும்.
6. பின்னர் மெதுவாக கால்களை மடித்து தரையை நோக்கி வந்து கால் பாதங்களை கை முட்டியை அழுத்தி தலையை உயர்த்தி எழுந்து மண்டியிட்டு உட்காரவும்.
8. பிறகு படுத்து உடலை தளர்த்தி ஓய்வு எடுக்கவும்.
அதோ முக ஸ்வனாசனா (Downward Dog yoga asana) :
அதோ என்றால் முன்னோக்கி, முக என்றால் முகம், ஸ்வன என்றால் நாய். அதாவது நாயைப் போன்ற வடிவத்தில் இந்த ஆசனத்தை செய்யப்படுவதால் சமஸ்கிருதத்தில் இப்பெயர் பெற்றுள்ளது. இந்த ஆசனம் செய்ய முதலில் நேராக நிமிர்ந்து நில்லுங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டபின், கால் மற்றும் முட்டிகளை வளைக்காமல் குனியுங்கள். நேராக குனியாமல் சற்று முன்னோக்கி குனிந்து உள்ளங்கைகளால் தரையை தொடுங்கள். கைகள் காதை மூடியவாறு வைக்க வேண்டும். உங்கள் கண்கள் வயிறை பார்த்தவாறு அமைய வேண்டும். நன்றாக ஆழ்ந்து மூச்சை வாங்கி விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வாருங்கள். இது போல் மூன்று முறை செய்யலாம். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வு படிப்படியாக குறைவதை காணலாம்.
வஜ்ராசனம் (Vajrasana)
வஜ்ராசனம் உட்கார்ந்த நிலையில் செய்யும் ஆசனம் ஆகும். இந்த ஆசனம் எளிமையானது என்பதால் அனைவரும் தாராளமாக செய்யலாம். வஜ்ராசனம் செய்ய முதலில் தரை விரிப்பில் உட்கார்ந்து மண்டியிட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள். பிறகு உங்க கால்களில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.உங்க முழங்கால்களுக்கு இடையில் நான்கு விரல்கள் இடைவெளி விட்டு உங்க குதிகாலில் பிட்டத்தை வைத்து உட்கார்ந்து கொள்ளுங்கள். இரு கால்களின் தொடைகளும் முறையே உங்க கால்களில் ஓய்வெடுக்க வேண்டும். இரு கால்களின் பெருவிரலும் ஒன்றுக்கொன்று தொட வேண்டும். உங்க கைகளை உங்க முழங்கால்களில் வைத்துக் கொள்ளுங்கள். உங்க முதுகை நேராக வைத்து உங்க பார்வையை நேராக முன்னோக்கி பாருங்கள். தலை நேராகவும், கன்னம் ஆனது தரைக்கு இணையாகவும் இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். 5 முதல் 10 நிமிடங்கள் இதே நிலையில் இருக்க முயற்சி செய்யுங்கள். இதனை தொடந்து செய்து வந்தால் முடி உதிர்வு கட்டுப்படும்.
பாலசனா (Balasana):
இது முன்னோக்கி வளைக்கும் போஸ் ஆகும். குழந்தைவயிற்றில் இருப்பது போன்ற நிலையில் இருப்பதால் இது குழந்தை போஸ் என அழைக்கப்படுகிறது. பாயில் மண்டியிட்டு உங்கள் குதிகாலில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் இடுப்பை குதிகாலில் ஓய்வெடுக்கவும். மூச்சை உள்ளிழுத்து சுவாசிக்கும்போது, உங்கள் மேல் உடலை வளைத்து முன்னோக்கி சாய்ந்து கொள்ளுங்கள். இப்போது தலைக்கு மேலே உங்கள் கைகளை உயர்த்தவும். இப்போது உங்கள் மேல் உடலை வளைக்கும்போது உங்கள் கைகளை தரையில் வைக்கவும். இந்த நேரத்தில் உடல் குதிக்காலில் இருந்து விடுப்பட்டு இருக்கும். இந்த யோகாவை தொடந்து செய்து செய்துவர முடி உதிர்வு பிரச்னை மட்டுமின்றி, செரிமானம், மன அழுத்தம் பிரச்சனைகளும் குணமாகும்.
கூந்தல் உதிர்வு பிரச்னை இருப்பவர்கள் மேற்கண்ட யோகா ஆசனங்களை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் முடி உதிர்வு குறைந்து அடர்த்தியாக முடி வளர்வதை கண்கூடாக காணலாம்
No comments:
Post a Comment